வாணியம்பாடி நகராட்சியில் 36 வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்
வாணியம்பாடி நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 36 வார்டு கவுன்சிலர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வாணியம்பாடி நகராட்சியில் வெற்றி பெற்ற திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் 29 பேர், சுயேச்சை 6 பேர் மற்றும் ஒரு ஏஐஎம்ஐஎம் கட்சி உறுப்பினர் ஆகியோருக்கு பதவிஏற்பு விழா நடைபெற்றது. 26 வார்டு உறுப்பினர்களை வாணியம்பாடி நகர திமுக பொறுப்பாளர் சாரதி குமார் சொகுசு பேருந்தில் அழைத்து வந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் ஸ்டாலின் பாபு தலைமையில் பதவி பிரமாணம் செய்த நிலையில் நிகழ்ச்சி துவங்கும் போது தமிழ்தாய் வாழ்த்தும் நிகழ்சி, முடியும் போது தேசிய கீதமும் பாடாமல் நிகழ்ச்சி நடந்து முடிந்தது.
இதில் தமிழ்தாய் வாழ்த்து பாடாதது குறித்து மஜ்லீஸ் கட்சியின் (ஒவைசி கட்சி) 19 வது வார்டு உறுப்பினர் நபீலா வக்கீல் அகமது, நகராட்சி ஆணையாளரிடம் இதுகுறித்து கண்டனம் தெரிவித்து, புகார் மனுவை கொடுத்தார்.
தமிழக அரசு உத்தரவுபடி, அரசு நிகழ்ச்சியில் தமிழ்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் புறக்கணிக்கும் வகையில் செயல்பட்ட நகராட்சி ஆணையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.