ஆந்திரா தடுப்பணை அருகே தமிழக இளைஞர் மர்ம மரணம் : கொலையா போலீஸ் விசாரணை
ஆந்திரா தடுப்பணை அருகே தமிழக இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது குறித்து ஆந்திர மாநிலம் குப்பம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வருபவர் சுந்தர் இவரிடம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த யுவராஜ் மற்றும் கணவாய் புதூர் பகுதியை சேர்ந்த திருமலை ஆகியோர் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
இருவரும் நண்பர்கள் என்பதால் கடந்த வெள்ளிக்கிழமை 21.01.2022 அன்று திருமலை மற்றும் யுவராஜ் ஆகியோர் தமிழக ஆந்திர எல்லை பகுதியில் உள்ள புல்லூர் தடுப்பணைக்கு சென்று அங்கு இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு வனப்பகுதியில் சென்று நண்பர்கள் இருவரும் இருந்துள்ளனர்.
பின்னர் திருமலை அங்கிருந்து இரவு நேரமானதால் வீட்டுக்கு வந்துள்ளார் பின்னர் நீண்ட நேரம் கடந்ததால் யுவராஜ் வீடு திரும்பவில்லை என்பதால் யுவராஜின் தந்தை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது நண்பரான திருமலையை தொடர்பு கொண்டு கேட்டபோது இருவரும் தடுப்பணை அருகே சென்றோம் ஆனால் நான் வந்து விட்டேன் அவர் எங்கு சென்றார் என்று எனக்கு தெரியவில்லை என்று தெரிவித்தார்.
அதன் பின்னர் யுவராஜின் தந்தை கோபால் ஆந்திர மாநிலம் குப்பம் காவல் நிலையத்தில் இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு சென்று எனது மகன் யுவராஜ் காணாமல் போயுள்ளதாக புகார் தெரிவித்தார் புகாரை பெற்று கொண்ட குப்பம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் புல்லூர் தடுப்பணை அருகே உள்ள வனப்பகுதியில் சடலமொன்று உள்ளதாக குப்பம் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்தபோது அங்கு உள்ள சடலம் 4 நாட்களுக்கு முன்பு காணாமல் போன யுவராஜின் சடலம் என்பதை உறுதிப்படுத்திய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்