ஸ்டாலின் படத்துடன் ஒட்டப்பட்ட போஸ்டர் மீது சேற்றை பூசிய மர்ம நபர்கள்

வாணியம்பாடியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் படத்துடன் ஒட்டப்பட்ட போஸ்டர் மீது சேற்றை மர்ம நபர்கள் பூசியதால் பரபரப்பு. போலீஸ் விசாரணை;

Update: 2021-07-24 14:45 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நகர திமுக சார்பில் பக்ரீத் பண்டிகையையொட்டி நகரம் முழுவதும் தமிழக முதல்வர்  ஸ்டாலின் படம் போடப்பட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன, அதில் வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகம் சுற்றுச்சுவரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் மர்ம நபர்கள் சேற்றை பூசி இருந்தனர், 

இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் படங்கள் வெளியானதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வாணியம்பாடி டிஎஸ்பி பழனிசெல்வம், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி போஸ்டர் மீது போடப்பட்டிருந்த சேற்றை  தண்ணீரை ஊற்றி அப்புறப்படுத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நகர திமுக பொறுப்பாளர் சாரதிகுமார் மற்றும் திமுகவினர் அங்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சேற்றை பூசியது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News