போக்குவரத்து ஆய்வாளர் மேற்கொண்ட வாகன தணிக்கை: 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
வாணியம்பாடியில் போக்குவரத்து ஆய்வாளர் மேற்கொண்ட வாகன தணிக்கையில் 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பணுர் கூட்டு சாலையில் போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனங்களை நிறுத்தி உரிய ஆவணங்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா என ஆய்வு செய்து வந்தனர்.
அதில் ஓட்டுனர் உரிமம், தலை கவசம் மற்றும் முகக்கவசம் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த 5 வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் உரிய ஆவணங்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்காத வாகனங்களை கண்டறிந்து பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து அலுவலர் கூறினார்.
இந்த ஆய்வின் போது போக்குவரத்து ஆய்வாளர் வெங்கெட்ராகவன் மற்றும் போக்குவரத்து துறை சார்ந்த அதிகாரிகள் இருந்தனர்