வாணியம்பாடியில் எம்எல்ஏ செந்தில்குமார் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்

வாணியம்பாடியில் எம்எல்ஏ செந்தில்குமார் குடும்பத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டு  முகாமை தொடங்கி வைத்தார்

Update: 2021-06-12 12:47 GMT

வாணியம்பாடியில் எம்எல்ஏ செந்தில்குமார் குடும்பத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டு  முகாமை தொடங்கி வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வாரசந்தை பகுதியில் உள்ள நகரபுற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட பிரிவினருக்கான கொரோனா தடுப்பூசி முகாமைமில் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தடுப்பூசி போட்டுக் கொண்டு தொடங்கி வைத்தார்.

வாணியம்பாடி தொகுதியில் கடந்த ஒரு வார காலமாக கொரோனா தடுப்பூசி இல்லாத நிலையில் இன்று தடுப்பூசி வந்ததால் போடும் பணிகள் தொடங்கப்பட்டது. வாணியம்பாடி வாரச் சந்தை மைதானத்தில் அருகில் உள்ள அரசு நகர்புற சுகாதார மையத்தில் தடுப்பூசி போடும் முகாமில் கலந்துகொண்ட வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட பிரிவினரில் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு முகாமைத் தொடக்கி வைத்தார். இதில் அவர் தனது குடும்பத்துடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

மேலும் அவருடன் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் என பலரும் ஆர்வமுடன் வந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். கொரோனா தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்தும், கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள வேண்டிய  அவசியம் என்ன என்பது குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தனது குடும்பத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டார். 

இந்த முகாமில் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பசுபதி டாக்டர் தேன்மொழி ஆகியோர் இருந்தனர் தொடர்ந்து வாணியம்பாடி தொகுதியில் 1500 பேருக்கு தடுப்பூசிகள் இன்று ஒரே நாளில் போடப்பட்டது.

Tags:    

Similar News