வாணியம்பாடியில் உள்ளாட்சி தேர்தல் திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது
வாணியம்பாடியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்பு;
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக வருகிற 6, 9ம் தேதி நடைபெறுகிறது. இதனை அடுத்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட நிம்மியம்பட்டு முல்லை உள்ளிட்ட பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை வழங்கினார்,
இதனைத்தொடர்ந்து நிம்மியம்பட்டு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக தலைமை பேச்சாளர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட அக்கட்சியினர் அதிமுகவிலிருந்து விலகி அமைச்சர்கள் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் முனிவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்