வாணியம்பாடி நகராட்சியில் மாபெரும் கொரானா தடுப்பூசி முகாம்
வாணியம்பாடி நகராட்சியில் நடைபெறும் மாபெரும் கொரானா தடுப்பூசி முகாமை துணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்;
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி ஆணையர் ஸ்டான்லி பாபு மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி ஆகியோர் தலைமையில், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 36-வார்டுகளிலும் வார்டுக்கு 2 மருத்துவ குழு வீதம், 72 குழுவாக வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் வருகின்றனர்
இதனை சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் செந்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் உடன் மருத்துவ அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், என சமூக ஆர்வலர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.