வாணியம்பாடி நகராட்சி உழவர் சந்தை காய்கறி வியாபாரிகளுடன் ஆர்.டி.ஓ. ஆலோசனை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி உழவர் சந்தை காய்கறி வியாபாரிகளுடன் ஆர்.டி.ஓ. ஆலோசனை நடத்தினார்.

Update: 2021-11-14 06:54 GMT

வாணியம்பாடி ஆர்.டி.ஓ. காயத்ரி சுப்பிரமணியன் உழவர் சந்தை காய்கறி வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுனில் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் வார சந்தை காய்கறி வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மாவட்ட கூடுதல் ஏ.டி.எஸ்.பி சுப்பாராவ் மற்றும் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சங்கர் முன்னிலை வகித்தார்

இந்த ஆலோசனை கூட்டத்தில் வார சந்தை பகுதியில் காய்கறி விற்கும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டன.நேற்று முன்தினம் தொடர் மழை காரணமாக உழவர்சந்தை சுற்று சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் படுகாயமடைந்தனர்.அவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த நிலையில் வருவாய்த்துறை மற்றும் நகராட்சி துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா நேரில் சென்று ஆய்வு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன் பின்னர் படுகாயம் அடைந்தவர்களுக்கு நிதி உதவி வழங்கினார்.

உழவர் சந்தையில் வியாபாரம் செய்யும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் அதிகாரிகள் காய்கறி வியாபாரிகள் ஒரு புறத்தில் வைத்துக்கொண்டு வியாபாரம் செய்யுமாறு உத்தரவிட்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வாணியம்பாடி தாசில்தார் மோகன், மாநகராட்சி மேனேஜர் ஜெயபிரகாஷ், வாணியம்பாடி டவுன் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் வியாபாரி சங்கத்தினர் என பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News