வாணியம்பாடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் கைது
வாணியம்பாடி அருகே சிறுமியை பாலியல் தொல்லை செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் அடுத்த உமர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் நிசார் அகமது (வயது 45) இவர் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
நேற்று இவரது எதிர் வீட்டில் உள்ள 3 வயது சிறுமியிடம் நைசாக பேசி சாக்லேட் வாங்கிக் கொடுப்பதாக கூறி தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, நிசார் அகமதுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வாணியம்பாடி அருகே 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது