ஆம்பூரில் 50% தொழிலாளர்களுடன் இயங்கும் காலணி மற்றும் தோல் தொழிற்சாலைகள்

ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில்  உள்ள காலனி மற்றும் தோல் தொழிற்சாலைகள் 50% தொழிலாளர்களுடன் இயங்கி வருகிறது

Update: 2021-06-02 11:58 GMT

ஆம்பூரில் 50% தொழிலாளர்களுடன் இயங்கும் காலணி மற்றும் தோல் தொழிற்சாலைகள் 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் சுமார் 100க்கும் மேற்பட்ட தோல் மற்றும் காலணி தொழிற்சாலைகள் உள்ளது. தற்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்து தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் அனைவரும் விடுமுறை விடப்பட்டது. தற்போது தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில்  50 சதவீத தொழிலாளர்களை கொண்டு இயங்கி வருகிறது

தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு  உடல் வெப்பபரிசோதனை செய்யப்பட்டு முகக்கவசம்,  தனிமனித இடைவெளி ஆகியவற்றை பின்பற்றி பணியாற்றி வருகின்றனர்

இதுமட்டுமல்லாமல் தமிழக அரசு அறிவித்துள்ள தடுப்பூசி செலுத்துவதற்கு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது 

இதுகுறித்து தோல் மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி உரிமையாளர் சங்க செயலாளர் முகிப்ஃபுல்லா தெரிவிக்கையில், தற்போது தொழிற்சாலைகளில் 50% பணியாட்கள் கொண்டு மட்டுமே இயங்கி வருகிறது. தொழிலாளர்களுக்கு தொழிற்சாலைகள் மூலமாக தனியாக வாகனங்கள் ஏற்பாடு செய்து, ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ முகாம்களுக்கு  அழைத்துசென்று தடுப்பூசி போடப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல்  தொழிற்சாலைக்கு வருவதற்காக அரசு அனுமதி பெற்று வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  அதில் தனிமனித இடைவெளி பின்பற்றி வாகனங்களில் தொழிலாளர்களை  அழைத்து வருகிறார்கள். தடுப்பூசி போட்டு கொள்வதற்காக செல்லும் தொழிலாளர்களுக்கு, அன்று ஒரு நாள் ஊதியம் வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

ஏற்கனவே தோல் மற்றும் காலணி தொழிற்சாலைகள் அதிகளவில் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில் அதிகமான தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகிறது. இதனால் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இதுபோன்ற  சூழ்நிலையில் தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் இதை நம்பி வாழ்ந்திருக்கும் பெண்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு இந்த பணி வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News