வாணியம்பாடி அருகே வளர்ச்சி பணிகள் குறித்து ஜோலார்பேட்டை எம்எல்ஏ ஆய்வு

வாணியம்பாடி அருகே வளர்ச்சி பணிகள் குறித்து ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்;

Update: 2021-07-04 12:30 GMT

வாணியம்பாடி அருகே செட்டியப்பனூர் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் குறித்து ஜோலார்பேட்டை எம்எல்ஏ ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம்  ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செட்டியப்பனூர் ஊராட்சியில் உள்ள துரையேரி பகுதியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் அப்பகுதிக்கு நேரடியாக சென்று நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும்,  அங்கு நிறைவேற்றப்பட வேண்டிய குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் வீதி, வீதியாக சென்று மக்களிடம் குறைகளை கேட்டார்.

அப்போது அப்பகுதி இளைஞர்கள் விளையாட்டு மைதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வேண்டி மனு அளித்தனர்  மனுக்களை பெற்று கொண்டு, திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பகுதியில் மரக்கன்றுகளை நட்டார் முன்னதாக எம்எல்ஏ வருகை தந்ததற்கு அவருக்கு மக்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர். ஆய்வின்போது ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்

Tags:    

Similar News