வாணியம்பாடி அருகே கொரோனா தடுப்பு பணிகளை இணை இயக்குநர் ஆய்வு
வாணியம்பாடி அருகே ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பு பணிகளை இணை இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வட்டாரத்திற்குட்பட்ட மற்றும் வாணியம்பாடி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், வள்ளிப்பட்டு மற்றும் ஆலங்காயம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இணை இயக்குநர் டாக்டர் சம்பத் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
அப்போது திருப்பத்தூர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் டி.ஆர்.செந்தில், வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.பசுபதி. மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.