வாணியம்பாடியில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 63,400 பறிமுதல்
வாணியம்பாடியில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 63,400 பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;
பறிமுதல் செய்யப்பட்ட பணம் நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆங்காங்கே வாகன சோதனையும் நடத்தப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோவிந்தாபுரம் பகுதியில் வாகன சோதனையின் போது உரிய ஆவணங்களின்றி தினேஷ் என்பவர் காரில் எடுத்து சென்ற 63,400 ரூபாய் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரி சித்ரா பிடித்து வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தார்.