வாணியம்பாடி அருகே 1400 லிட்டர் சாராய ஊறல் அழித்த மதுவிலக்கு போலீசார்

வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லை மலைப்பகுதியில் 1400 லிட்டர் சாராய ஊறலை மதுவிலக்கு போலீசார் அழித்தனர்.

Update: 2021-10-27 10:00 GMT

சாராய ஊறலை கொட்டி அழிக்கும் மதுவிலக்கு பிரிவினர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தமிழக ஆந்திரா எல்லைப் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி தமிழகப் பகுதியில் எடுத்து வரப்பட்டு விற்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் வாணியம்பாடி டி.எஸ்.பி சுரேஷ் பாண்டியன் உத்தரவின் பேரில் சிந்தாகமணிபெண்டா, தேவராஜபுரம், மாதகடப்பா ஆகிய பகுதிகளில் மது அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் பழனி தலைமையிலான போலீசார் முகாமிட்டு சோதனை செய்தனர்.

அப்பொழுது மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காட்டுவதற்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர் போலீசார் வருவதை கண்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. அதனைத் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்ச வைத்திருந்த  200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 7 பேரல் சாராய ஊறல், மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்ச மூலப் பொருட்கள் ஆகியவற்றை அழித்தனர். மேலும் சாராயம் காய்ச்சிய  கோபி, முனியய்யா, ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News