வாணியம்பாடியில் வீடு வீடாக கொரோனா தடுப்பூசி; மாவட்ட கலெக்டர் ஆய்வு

வாணியம்பாடியில் வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணியை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆய்வு செய்தார்.;

Update: 2021-09-02 09:13 GMT

வாணியம்பாடியில் வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணியை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா, தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி ஆகிய பகுதிகளில் வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பணிபுரியும் தொழிலாளர் பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் இல்லை என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், கடைகள் ஆகியவற்றுக்கு சீல் வைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி கிராமப் பகுதி மற்றும் நகரப் பகுதியில் இருக்கக்கூடிய மக்களை தேடி கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தையும் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்திருந்தார்.

வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா  திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அதேபோல் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியில் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில்,  மக்களை நேரடியாக வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதனை திருப்பத்தூர் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் செந்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த தடுப்பூசி போடும் பணியில் சுகாதாரத்துறை மற்றும் மருத்துவர்கள் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News