வாணியம்பாடியில் குட்கா, பான்மசாலா பறிமுதல்
வாணியம்பாடியில் தடைசெய்யப்பட்ட 3 லட்சம் மதிப்பிலான குட்கா, பான்மசாலா பறிமுதல். எஸ்பி நேரில் விசாரணை;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இப்ராஹிம் நகர் பகுதியில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் கிருஷ்ணன் என்பவர் வாடகைக்கு எடுத்து குடோன் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் குடோனில் சட்டவிரோதமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் பான் மசாலா,குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை கொண்டு வந்து வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்து வருவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தனிப்படை காவல்துறையினர் மற்றும் வாணியம்பாடி டிஎஸ்பி பழனி செல்வம் தலைமையில் காவல்துறையினர் சென்று குடோனில் சோதனை செய்தபோது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 3 லட்சம் மதிப்பிலான ஹான்ஸ், பான்மசாலா குட்கா ஆகியவை பறிமுதல் செய்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி உடனடியாக குடோனுக்கு சீல் வைக்க வருவாய் துறைக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
மேலும் தலைமறைவாக இருந்த பிஸ்மில்லா (வயது 37) மற்றும் தாஜுதீன் (வயது38) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள குடோன் உரிமையாளர் கிருஷ்ணன் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.