தேசிய திறனாய்வு தேர்வில் வாணியம்பாடி நகராட்சி அரசு பள்ளி மாணவி சாதனை
பெருமாள்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவி 2020-21 ஆம் ஆண்டிற்கான தேசிய திறனாய்வுத் தேர்வில் வாணியம்பாடியில் முதலிடம் பிடித்தார்;
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பெருமாள்பேட்டையில் இயங்கி வரும் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பயின்ற எட்டாம் வகுப்பு மாணவி மு.தர்ஷிணி கடந்த 2020-21 ஆம் ஆண்டிற்கான தேசிய திறனாய்வுத் தேர்வில் 150க்கு 101 மதிப்பெண் பெற்று வாணியம்பாடி அளவில் முதலிடம் பெற்று தேர்ச்சி பெற்றார்.
சாதனை படைத்த மாணவியை பள்ளி தலைமையாசிரியர் பூ.முருகேசன், ஊர் தலைவர் சீனிவாசன் மற்றும் பள்ளிக் கல்வி குழு தலைவர் ரேவதி தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவில் பள்ளி ஆசிரியர்கள் சார்பில் திருக்குறள் புத்தகம், எழுதுகோல், ரொக்கம் ரூ.3000 ஆகியவற்றை வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாணவியின் பெற்றோர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மீனாட்சி, பிரபு, மகஜபின், இடைநிலை ஆசிரியர்கள் அரவிந்தன், சாந்தினி, சசிகலா கலந்து கொண்டனர்.