வாணியம்பாடி கோட்டை பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகள்

வாணியம்பாடி கோட்டை பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Update: 2021-06-14 11:52 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோட்டை பகுதிக்கு செல்லும் முக்கிய வீதியான ஆற்றுமேடு பகுதிக்கு செல்லும் சாலையில் பல நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. அதனால் அருகில் உள்ளவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து நகராட்சி இடம் பலமுறை புகார் தெரிவித்தும்,  இதுநாள்வரை குப்பைகளை எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே உடனடியாக நகராட்சி நிர்வாகம் செயல்பட்டு குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News