நாட்றம்பள்ளி ஒன்றியம் 4வது வார்டில் 4 முனை போட்டி.
நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் 4வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 4 முனைப்போட்டி நிலவுகிறது.;
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் 6 ஆம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 4 வது வார்டு ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் தியாகராஜன், திமுக சார்பில் போட்டியிடும் வேண்டாமணி அழகேசன், தேமுதிக சார்பில் போட்டியிடும் பிராபாவதி பிச்சைமுர்த்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கோவிந்தராஜ் என 4 முனை போட்டி நடைபெறுகிறது
நாட்றம்பள்ளி 4வது வார்டில் அதிமுக திமுக தேமுதிக நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் நேரடியாக மோதி கொள்கிறது இதனால் இந்த ஒன்றிய கவுன்சிலர் பதவியில் பரபரப்பாக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது