வாணியம்பாடியில் மஜக பிரமுகர் வசீம் அக்ரம் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது

வாணியம்பாடியில் மஜக பிரமுகர் வசீம் அக்ரம் கொலை வழக்கில் கொலைக்கு உடந்தையாக இருந்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2021-09-15 17:30 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கடந்த 10 ஆம் தேதி ஜீவா நகர் பகுதியில் மஜக நிர்வாகி வசீம் அக்ரம் (வயது 43) என்பவர்  8 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வேலூர் சரக டி.ஐ.ஜி ஏ.ஜி.பாபு 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை பிடிக்க சென்னை, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் விசாரணையில் ஈடுபட்டனர்.

மேலும் கடந்த 10 ஆம் தேதி டில்லி குமார்,  பிரசாந்த் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் டீல் இம்தியாஸ் கூறியதில் பேரில் கொலை செய்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

பின்னர் இந்த வழக்கை விசாரிக்க விசாரணை அதிகாரியாகவும்,  நகர காவல் ஆய்வாளராகவும் நாகராஜ் என்பவரை நியமித்து வேலூர் சரக டிஐஜி பாபு உதவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் செல்வகுமார், முனீஸ்வரன், சத்தியசீலன், அகஸ்டின், அஜய், பிரவீன் குமார் ஆகிய 6 பேர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர். இதில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த டீல் இம்தியாஸ் சிவகாசி நீதி மன்றத்தில் சரணடைந்தார்

இந்நிலையில் தொடர்ந்து அதிகாரி நாகராஜ் நடத்திய விசாரணையில் ஆயுதங்கள் கொண்டு சேர்த்தல்,  கொலை செய்ய  ஆட்கள் நடமாட்டம் குறித்து கண்காணித்து இந்த கொலைக்கு உதவியாக இருந்ததாக வாணியம்பாடி பகுதியை சேர்ந்த நயீம் பாஷா, பைசல் அகமது, யூசுப் ஜமால், முகமது அலி ஆகிய 4 பேரை கைது செய்துள்ளார்.

Tags:    

Similar News