கலந்திரா ஊராட்சியில் விவசாய நிலத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

வாணியம்பாடி அருகே கலந்திரா  ஊராட்சியில் விவசாய நிலத்தில் இருந்த 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர்

Update: 2022-01-23 13:56 GMT

கலந்திரா ஊராட்சியில் வயலில் சிக்கிய மலைப்பாம்பு

திருப்பத்தூர் மாவட்டம் கலந்திரா ஊராட்சி அடுத்த கினிக்கிட்டி வட்டம் பகுதியில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் பணி புரியும் ராஜு என்பவருக்கு  சொந்தமாக ன விவசாய நிலம் உள்ளது .

விவசாய நிலத்தில்  கால்வாய் சரிசெய்து கொண்டிருக்கும் போது சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பார்த்த அவர்கள் . உடனடியாக  திருப்பத்தூர் வனச்சரகர்  பிரபுவுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த அண்ணாமலை மற்றும் கிருஷ்ணன் ஆகியோர ஆகியோர் மலைப்பாம்பை பிடித்து ஏலகிரி மலை காப்பு காட்டில் பத்திரமாக விட்டனர்.

Tags:    

Similar News