பேருந்து  படியில் நின்று ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்கள்

Footboard Meaning in Tamil-வாணியம்பாடியில் பேருந்து  படியில் நின்று ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்கள்! கண்டுகொள்ளாத பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்

Update: 2021-12-09 13:00 GMT

வாணியம்பாடி அருகே பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்கும் மாணவர்கள்

Footboard Meaning in Tamil-தமிழக அரசு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சுற்றறிக்கை ஒன்று பிறப்பித்தது. அதில் பேருந்துகளில் படியில் நின்றபடி மாணவர்கள் அதிகளவில்  பயணித்து வருகின்றனர்.  மேலும் அது போன்று  பயணம் செய்தால்  அதுபோன்ற பயணிகள் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சுற்றறிக்கை அறிவித்திருந்தனர்

இந்த நிலையில்,  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து நாராயணபுரம் வரை செல்லக்கூடிய அரசு பேருந்து பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கிராமத்துக்கு செல்கின்றன. 24 நம்பர் கொண்ட அரசு பேருந்தில் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான நிலையில் படியில் நின்று  தொங்கியபடி  பயணம் செய்து வருகின்றனர்.

இதனை கண்டுகொள்ளாத பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை மீறி பேருந்தில் பயணம் செய்ய அனுமதித்து வருகின்றனர். எனவே  அறிவித்த விதிமுறைகளை மீறி செயல்படக்கூடிய அரசுப் பேருந்துகள் மீது போக்குவரத்து துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News