குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த வெள்ளம்; மக்கள் சாலையில் தஞ்சம்

வாணியம்பாடி அருகே மழைநீருடன் கழிவுநீர் கலந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் மக்கள் சாலை தஞ்சமடைந்தனர்.

Update: 2021-08-10 09:46 GMT

வாழியம்பாடி மேட்டுப்பாளையம் பகுதியில் வீட்டுக்குள் புகுந்த மழைநீர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சிக்கு உட்பட்டது மேட்டுப்பாளையம். இப்பகுதியில் உள்ள வீடுகளில் நேற்று இரவு பெய்த தொடர் மழையின் காரணமாக மழை நீருடன் கழிவுநீர் கால்வாயில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகளில் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் நள்ளிரவு முதல் செய்வதறியாத குடியிருப்பை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

தங்கள் குறைகளை நீக்க அதிகாரிகள் எவரும் முன்வரவில்லை என கூறி ஆத்திரம் அடைந்த பகுதி மக்கள் மேட்டுப்பாளையம் பள்ளிப்பட்டு சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் பொதுமக்களிடம் சமரசம் செய்து மறியலை கைவிடுமாறு அறிவுறுத்தலின் பேரில் பொதுமக்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர்.

தங்களது பகுதிக்குள் கழிவுநீர் கால்வாயில் இருந்து வெளியேறும் தண்ணீர், மழை பெய்யும் பொழுதெல்லாம் வீடுகளுக்குள் புகுந்து விடுவதால்  குழந்தைகளுடன் அவதிப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தங்களின் குறைகளை விரைந்து தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News