வாணியம்பாடி காவல் துறையினர் சார்பில் கொடி அணிவகுப்பு பேரணி

வாணியம்பாடி காவல் துறை சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல் துறையினர் கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர்

Update: 2022-02-16 08:30 GMT

நகர்புற உள்ளாட்சித்தேர்தலை முன்னிட்டு வாணியம்பாடியில் காவல்துறை கொடி அணிவகுப்பு நடைபெற்றது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காவல் துறை சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் தலைமையில் காவல்துறையினர் முக்கிய வீதி வழியாக கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

பேரணியை  வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

கோணாமேடு பகுதியில் இருந்து பேரணி தொடங்கி காதர்பேட்டை, வாரசந்தை சாலை, சி.எல் சாலை, பேருந்து நிலையம் வழியாக சென்று இறுதியாக நகராட்சி அலுவலகம் முன்பாக முடிவடைந்தது. பேரணியில் இரண்டு காவல் துணை கண்காணிப்பாளர்கள், 5 காவல் ஆய்வாளர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட போலீஸார் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News