பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கட்டுரை போட்டி
வாணியம்பாடி அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது;
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவின் பெயரில், தொடர்ந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 5 நாட்களாக மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வாணியம்பாடி நியூடவுனில் உள்ள அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கொரோனா விழிப்புணர்வை மாணவர்களிடம் வளர்ப்பதற்காக விழிப்புணர்வு கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர் போட்டிகளை பள்ளியின் தலைமையாசிரியர் பாலசுப்பிரமணி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.பசுபதி ஆகியோர் நடத்தினர்.
போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.