வாணியம்பாடியில் உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட தங்க நகைகள் பறிமுதல்
வாணியம்பாடியில் உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.6.5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி செண்ணாம்பேட்டை பகுதியை சேர்ந்த கணேஷ். இவர் இன்று காலை குடியாத்தம் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் சுமார் 6.5 லட்சம் மதிப்பிலான 18 சவரன் தங்க நகைகளை எடுத்து வந்துள்ளார்.
அப்போது தேர்தல் பறக்கும் படை அதிகாரி சித்ரா தலைமையிலான அதிகாரிகள் வாணியம்பாடி பஜார் பகுதியில் வாகன தனிக்கையின் போது அவர் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது உரிய ஆவணம் இன்றி அவர் எடுத்து வந்த ரூ.6.5 லட்சம் மதிப்பிலான 18 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து வாணியம்பாடி நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்டாலின் பாபுவிடம் ஒப்படைத்தனர்.