வாணியம்பாடியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட நகைகள் பறிமுதல்
வாணியம்பாடியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 3 லட்சம் மதிப்பிலான நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறதா என கண்காணிக்க தேர்தல் ஆணையம் பறக்கும் படை அமைத்து கண்காணித்து வருகிறது.
இதில் கச்சேரி சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சித்ரா தலைமையிலான குழுவினர் வாகன சோதனையின் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக துக்காராம் என்பவரது இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில் அவர், 3 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான 8 சவரன் தங்க நகைகளை கொண்டு சென்றது தெரிய வந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் நகைகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் வாணியம்பாடி நகராட்சி ஆணையாளரும் தேர்தல் நடத்தும் அலுவலரான ஸ்டேன்லி பாபுவிடம் ஒப்படைத்தனர்