கொரோனா  தடுப்பூசி வீட்டிற்கே சென்று போடும் பணி: டிஆர்ஓ ஆய்வு

வாணியம்பாடி அருகே கொரோனா  தடுப்பூசி வீட்டிற்கே சென்று போடும் பணியை மாவட்ட வருவாய் அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்;

Update: 2021-09-01 11:02 GMT

வீட்டிற்கே சென்று தடுப்பூசி போடும் பணியை மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் ஆய்வு செய்தார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதிகளில் உள்ள கிராமம் மற்றும் குக்கிராமங்களுக்கு கொரோனா தடுப்பூசி வீட்டிற்கே சென்று போடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அம்பலூர் கிராமத்தில் மாவட்ட  வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன் கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்வை அம்பலூர் வவ்வால் தோப்பு வட்டத்தில் துவக்கி வைத்தார். அதேபோல்  அம்பலூர்  அரசு மேல்நிலைப்பள்ளியில்   கொரோனா  நோய்தடுப்புபணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வருவாய்  சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் மகாலட்சுமி,  மகளிர்குழு பிரதிநிதி இந்துமதி, தயாளமூர்த்தி  அம்பலூர் அசோகன்  மற்றும்  மதிவாணன் என பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News