கொரோனா தடுப்பூசி போடும் பணி: மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

வாணியம்பாடி அருகே கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்;

Update: 2021-10-23 16:47 GMT

தடுப்பூசி போடும் பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன் 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுக்காவில் உள்ள நாட்றம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட வடக்குப்பட்டு, தேக்குபட்டு,  இராமநாயக்கன்பேட்டை, ஆவாரங்குப்பம், திம்மாம்பேட்டை, எக்லாசபுரம், சங்கராபுரம், அம்பலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நேற்று வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்றது.

இப்பணியில் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் இதனை ஒவ்வொரு பகுதிகளுக்காக சென்று மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார் இந்த ஆய்வின் போது அம்பலூர் அசோகன் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அரசு அதிகாரிகள் என பலர் உடன் இருந்தனர்...

Tags:    

Similar News