ஆலங்காயம் அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் குடும்ப நல துணை இயக்குநர் ஆய்வு
வாணியம்பாடி அருகே ஆலங்காயம் அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் துணை இயக்குநர், குடும்ப நலம் மருத்துவர் ஆய்வு மேற்கொண்டார்;
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் சமுதாய சுகாதார நிலையத்தில் நேற்று துணை இயக்குநர் குடும்ப நலம் மருத்துவர் மணிமேகலை டி ஜி ஓ ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறும் அனைத்து திட்டங்கள் மற்றும் குடும்பநலம் தொடர்பான திட்டங்கள் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி மற்றும் மருத்துவ அலுவலர்களுடன் கலந்தாலோசித்து, ஆய்வு மேற்கொண்டு நிறைகளைப் பாராட்டியும், குறைகளை சுட்டிக்காட்டியும் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் பேசினார்.
உடன் மாவட்ட புள்ளியல் உதவியாளர் அம்பேத்கர் செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்...