வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த மான் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு
வாணியம்பாடி அருகே வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த மான் கிணற்றில் விழுந்து உயிரிழந்தது. உடலை மீட்டு வனத்துறையினர் விசாரணை;
இறந்த மானை எடுத்து செல்லும் வனத்துறையினர்
திருப்பத்தூர் வாணியம்பாடி அடுத்த பள்ளிப்பட்டு அருகே உள்ள காட்டுப்பகுதியில் இருந்து மான் ஒன்று கிராம பகுதிகளுக்கு புகுந்துள்ளது.
இதனை கண்ட அப்பகுதியில் உள்ள நாய்கள் மானை துரத்தியதில் அருகில் இருந்த விவசாய நிலத்தில் தவறி விழுந்தது. கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் மான் நீரில் மூழ்கி பலியானது. இந்தநிலையில் அப்பகுதிக்கு சென்ற நபர்கள் மான் கிணற்றில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் அதனை தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் அடிப்படையில் அங்கு வந்த ஆலங்காயம் வனத்துறை அதிகாரிகள் மானை மீட்டு எடுத்துச் சென்றனர். மேலும் வனப்பகுதிக்குள் ஏற்கனவே நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பதால் மான் எப்படி வழி தவறி ஊருக்குள் புகுந்தது என சமூக ஆர்வலர் மற்றும் வன ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் வனப்பகுதியில் உள்ள விலங்குகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.