தனியார் நிறுவனத்தில் சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு கூட்டம்

வாணியம்பாடி தனியார் தோல் கையுறை தயாரிக்கும் நிறுவனத்தில் சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர்;

Update: 2021-11-13 14:00 GMT

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்பா ராவ்

திருப்பத்தூர் மாவட்ட எஸ் பி டாக்டர் பாலகிருஷ்ணன்  இணைய வழி மூலமாக நடைபெறும் சைபர் குற்றங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார்

அதன்படி, சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்பா ராவ் தலைமையில் சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பிரேமா முன்னிலையில் வாணியம்பாடி வளையாம்பட்டு பகுதியில் உள்ள  தனியார்  தோல் கையுறை  குளோஸ் உற்பத்தி செய்யும் தொழிற்ச்சாலையில் சுமார் 300 பேருக்கு இணைய வழி மூலமாக நடைபெறும் சைபர் குற்றங்கள் பற்றியும்  சைபர் குற்றங்களில் இருந்து நம்மை பாதுகாத்துகொள்ள செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றியும் தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்சனைக்கும் முடிவல்ல என்பது பற்றியும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது . 

இணையவழி பணமோசடி பற்றிய புகார்களுக்கான கட்டணமில்லா உதவி எண் 155260 ஐ 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொள்ளலாம் என்பது பற்றியும். சைபர் குற்றங்களை பற்றிய புகாரை இணையவழியில்  https://www.cybercrime. பதிவு  செய்யலாம் என்பதை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சரத்குமார், தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பிரகாஷ்  மற்றும் கங்காதேவி, உள்ளிட்ட ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News