வாணியம்பாடி அருகே கிராமப்பகுதிகளில் கொரோனா குறித்து விழிப்புணர்வு

வாணியம்பாடி அருகே ராமநாயக்கன்பேட்டை, மேல்குப்பம் ஆகிய கிராமப்பகுதிகளில் வருவாய்த் துறையினர் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

Update: 2021-06-10 16:25 GMT

வாணியம்பாடி அருகே கிராமப்பகுதிகளில் கொரோனா குறித்து விழிப்புணர்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றானது தீவிரமடைந்து வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் கிராமப்பகுதிகளில் கொரோனா எவ்வாறு பரவுகின்றன அதனை தடுக்க தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதனை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராமநாயக்கன்பேட்டை, மேல்குப்பம் ஆகிய பகுதிகளில் வருவாய்த் துறையினர் சார்பில் தெருக்கூத்து நாடகம் நடத்தி கிராம மக்களுக்கு வருவாய்த்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும் அனைவருக்கும் இலவசமாக முகக் கவசங்கள் வழங்கப்பட்டன

Tags:    

Similar News