வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்ற ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி

வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்றத்தில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Update: 2022-01-07 13:38 GMT

வாணியம்பாடியில் குற்றவியல் நீதிமன்ற வளாகம் முழுவதும் நகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் பணிபுரிபவர் பிரசன்னா. இவர் சென்னையை சேர்ந்தவர் பணிக்காக வாணியம்பாடியில் தங்கி குற்றவியல் நீதிமன்றத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று உடல் சோர்வு ஏற்பட்டவுடன் பிரசன்னா வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அப்போது மருத்துவர்கள் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

பரிசோதனை முடிவில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. மேலும் நீதிமன்ற வளாகம் முழுவதும் வாணியம்பாடி நகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மை படுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News