வாணியம்பாடியில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்: கலெக்டர் ஆய்வு
வாணியம்பாடியில் மெகா கொரோனா தடுப்பூசி முகாமினை பல்வேறு பகுதிகளுக்கு சென்று மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆய்வு செய்தார்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் மேட்டுப்பாளையம் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றுவரும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார் அப்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து நபர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் நோய் தொற்றிலிருந்து மாவட்டத்தில் உள்ள மக்களை பாதுகாக்க வேண்டும். அதே நேரத்தில் கொரோனா இல்லாத மாவட்டமாக நம் மாவட்டம் இருக்க வேண்டுமென வலியுறுத்தினார்
இந்த ஆய்வின் போது வாணியம்பாடி தாசில்தார் மோகன் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் செவிலியர்கள் என பலர் உடன் இருந்தனர்..