திமுகவில் இரு கோஷ்டிகளுக்கிடையே தகராறு: ஆரம்பமானது உள்ளாட்சி பஞ்சாயத்து
ஆலங்காயம் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்காக திமுகவில் இரு கோஷ்டிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறில் போலீசார் லேசான தடியடி நடத்தினர்;
திமுகவினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல்
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஒன்றியக்குழு உறுப்பினர்கள் 18 பேர் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது .
இதில் மொத்தம் 18 ஒன்றிய குழு உறுப்பினர்களில் 11 திமுகவும், 4 அதிமுக, 2 பாமக, 1 சுயேட்சை உட்பட 18 பேர் வெற்றி பெற்றனர். அவர்கள் இன்று ஆலங்காயம் ஒன்றிய அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
பதவி விழா முடிந்து வெளியில் வந்த போது ஒன்றிய குழு தலைவர் பதவியை கைப்பற்ற திமுக கட்சியினரிடையே இரு கோஷ்டியினரிடையில் வெற்றி பெற்ற பதவி ஏற்றுக்கொண்ட கவுன்சிலர்கள் அழைத்துச்செல்ல திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜ். அவருடைய மருமகள் காயத்ரி பிரபாகரன் மற்றும் ஆலங்காயம் ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் பாரி சங்கீதா ஆகிய இரு தரப்புக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இரு கோஷ்டியினரும் ஒன்றிய கவுன்சிலர்களை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றியப்போது கைகலப்பாக மாறியது. இதனால், போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இருந்தபோதிலும் பாரி சங்கீதா அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் சுயேச்சை கவுன்சிலர்களை காரில் ஏற்றிச் சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.