வாணியம்பாடியில் 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி நகை, பணம் மோசடி: இளைஞர் கைது, தந்தையிடம் விசாரணை
வாணியம்பாடியில் காதலிப்பதாக கூறி பாலியல் துன்புறுத்தல் செய்து, நகை, பணத்தை மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த தந்தையிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.;
வாணியம்பாடியில் சிறுமி பாலியல் புகாரில் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறியும் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பெண்ணின் தாயார் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்திருந்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்ததில் அதே பகுதியை சேர்ந்த ஃபைசல் கான் (வயது 21) என்பவரை கைது செய்து விசாரணை செய்தனர்.
அதில் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தது தெரியவந்தன அதனைத் தொடர்ந்து திருமணம் செய்வதாக கூறி ஆசை வார்த்தை கூறி அவரிடம் இருந்து 6 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ஏமாற்றியதும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து இளைஞர் பைசல் கான் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் இவருக்கு துணையாக இருந்த அவரது தந்தை கரீம் கான் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர் வாணியம்பாடி அருகே 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி அவரிடம் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது