வாணியம்பாடி அருகே கஞ்சா விற்ற பெண் கைது, கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல்
வாணியம்பாடி அருகே கஞ்சா விற்ற பெண் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த கஞ்சா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்ரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் நாகராஜ் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இந்திரா நகர் அருகே உள்ள கலாய்கார் வட்டம் என்ற இடத்தில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த பெண் போலீசார் வருவதை கண்டு தப்பியோட முயற்சி செய்துள்ளார்.
அப்போது அப் பெண்ணை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் பேர் ராணி என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். சம்பவம் குறித்து தாலுக்கா போலீசார் வழக்கு பதிவுசெய்து ராணியை சிறையில் அடைத்தனர்.