வாணியம்பாடியில் வணிக நிறுவனங்கள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால் அபராதம்
வாணியம்பாடியில் வணிக நிறுவனங்கள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால் அபராதம் மற்றும் சீல் வைப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்து வணிகர்களுக்கான ஆலோசனை கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணி தலைமையில் நடைபெற்றது.
இதில் நகராட்சி, வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரதுறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர். இதில் வாணியம்பாடி தொழில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் மளிகை, காய்கறி, சலூன், அழகு நிலையங்கள், ஜவுளி கடை உள்ளிட்ட அனைத்து வணிகர்களும் கலந்துகொண்டனர்.
வணிகர்கள் மத்தியில் பேசிய வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணி தமிழக அரசு மக்களுக்காக மக்கள் நலனுக்காக செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பெருந் தொற்றின் காரணமாக கடந்த காலங்களில் பல உயிர்களை பலி கொடுத்துள்ளோம்,
இனி பெருந்தொற்று பரவாமல் தொற்றில் இருந்து மக்களை மீட்டு உயிரிழப்பை முற்றிலும் தடுக்க வேண்டும், அதற்கு வணிகர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயமாக கடைபிடித்து ஒத்துளைக்க வேண்டும், அவ்வாறு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் விதி முறைகளை மீறும் வணிகர்கள் மீது எந்த வித பாராபட்சம் பார்க்காமல் அபராதம் மற்றும் சீல் வைப்பு என கடுமையான நடவடிக்கைகள் எடுக்கபடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.