தந்தையின் கண்முன்னே ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுவன்

வாணியம்பாடி அருகே ஏரியில் நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த சிறுவன் தந்தை கண்முன்னே நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்.

Update: 2021-08-18 14:12 GMT

நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவன்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் பெருமாள் இவர்  சுங்கச்சாவடியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர்களுக்கு சொந்தமான ஆடுகளை  அதே பகுதியில் உள்ள ஏரிக்கு மேய்ச்சலுக்கு கொண்டு சென்றார். அப்போது அவரது மகன் சுஜித்குமார் (வயது 10 ) மற்றும் சுஜித்குமாரின் நண்பர்கள் 2 பேர் அங்குள்ள ஏரியில் குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென சுஜித் குமார் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி மயங்கி உள்ளார் உடனடியாக அவரது தந்தை பெருமாள் சிறுவனை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். மருத்துவமனையில்  மருத்துவர்கள் சிறுவனை பரிசோதனை செய்து சிறுவன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்‌.

Tags:    

Similar News