வாணியம்பாடியில் இருசக்கர வாகனம் திருடிய நபர் கைது

வாணியம்பாடியில் இருசக்கர வாகனம் திருடிய நபர் கைது செய்யப்பட்டார்; 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-11-16 00:30 GMT

கைதானவர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருடு போவதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில்,  நேற்று முன் தினம், வாகன தணிக்கையின் போது, சந்தேகத்துக்கு இடமான  வகையில் இரு சக்கர வாகனத்தில்  அதிவேகமாக சென்ற நபரை பிடித்து போலீசார்  விசாரணை செய்தனர்.

இதில்,  பெரியார் நகர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பதும்,  அவர் இரு சக்கர வாகனங்களை திருடி சென்று விற்று வந்ததும்  தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News