வாணியம்பாடி அருகே அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
வாணியம்பாடி அருகே அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர். விடுமுறையை கழிக்க குவியும் சுற்றுலா பயணிகள்;
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி உருவாகியுள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் கடந்த ஒரு மாத காலமாக தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், கௌண்டன்யா வனவிலங்குகள் சரணாலயம் காப்புக் காடுகள் உள்ளன, இந்த காடுகளில் கடந்த ஒரு மாத காலமாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த வனப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு ஓடைகள், கானாறுகள், சிற்றருவிகளில் தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
குப்பம் தொகுதி, ராமகுப்பம் மண்டலம் தேவராஜபுரத்திற்கு தெற்கே "ஆந்திராவின் அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி" என்னும் பொம்மகெடா நீர்வீழ்ச்சியில் புதியமாக உருவாகி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் சுமார் 40 அடி உயரத்திலிருந்து தண்ணீர் கொட்டுகிறது.
இந்த நீர்வீழ்ச்சியில் குளித்து ஆந்திரா , தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இளைஞர்கள் மட்டுமல்லாது பெண்களும், சிறுவர் சிறுமிகளும் இங்கு தண்ணீரில் குளித்து மகிழ்ந்து விளையாடி வருகின்றனர். விடுமுறை நாட்கள் மட்டும் அல்லாது வார நாட்களிலும் இங்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.