வாணியம்பாடியில் கே.சி வீரமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அமமுகவினர்
வாணியம்பாடியில் அமமுகவினர் 50க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் ஆலங்காயம் பகுதிகளிலிருந்து அமமுக மாவட்ட அவைத்தலைவர் செல்வம், நகர செயலாளர் அண்ணாதுரை, ஆலங்காயம் ஒன்றிய கழக செயலாளர் எழிலரசு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நக்கீரன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, சட்டமன்ற உறுப்பினர் ஜி.செந்தில்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.வி சம்பத்குமார் ஆகியோர் முன்னிலையில் அதிமுகவில் (தாய் கழகத்தில்) இணைந்தனர்.
அப்போது வாணியம்பாடி நகர கழக செயலாளர் சதாசிவம், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மகேந்திரன், நகர பொருளாளர் தனராஜ், பாரதிதாசன் செல்வராஜ் கோவிந்தன் உட்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.