வாணியம்பாடியில் மஜக நிர்வாகி குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதி
வாணியம்பாடியில் படுகொலை செய்யப்பட்ட மஜக நிர்வாகி வசீம் அக்ரம் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் கடந்த மாதம் 10-ம் தேதி மஜக முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் அவருடைய வீட்டு அருகில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனை அறிந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனி சாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கட்சி சார்பில் நிதி உதவியாக ரூ.5 லட்சம் வழங்க அறிவித்தனர்.
இதன் அடிப்படையில் இன்று முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, படுகொலை செய்யப்பட்ட வசீம் அக்ரம் வீட்டிற்க்கு நேரில் சென்று அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரணமாக ரூ.5 லட்சத்திற்க்கான காசோலையை அவருடைய குடும்பத்தினரிடம் வழங்கினார்.
அப்போது வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார், நகர செயலாளர் சதாசிவம், பொருளாளர் தன்ராஜ், பாரதிதாசன், கோவிந்தசாமி, எஸ்.டி ஆரிப், குண்டு ஆசிப், சையத் சபியுல்லா மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.