வாணியம்பாடியில் நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் அதிமுக வேட்பாளர்கள்
வாணியம்பாடியில் மேளதாளங்கள் முழங்க வீதி வீதியாக சென்று நூதன முறையில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு.;
வாணியம்பாடியில் மேளதாளங்கள் முழங்க வீதி வீதியாக சென்று நூதன முறையில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. இதில் 5 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பிரகாசம் என்பவரை ஆதரித்து வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அப்பகுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்பொழுது வேட்பாளர் பிரகாசம் தெருக்களை தொடப்பம் கொண்டு சுத்தம் செய்தும், தள்ளுவண்டியில் காய்கறிகளை விற்பனை செய்து நூதன முறையில் வாக்குகள் சேகரித்தார். அதேபோன்று வாணியம்பாடி 11 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கலைவாணி குமார் என்பவரை ஆதரித்து எம்எல்ஏ செந்தில்குமார் வீதி வீதியாக சென்று துண்டுப்பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.
அப்போது மேள தாளங்கள் முழங்க மயிலாட்டம், குதிரை ஆட்டம், பொம்மலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சியுடன் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் வாணியம்பாடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி சம்பத்குமார், நகரச் செயலாளர் சதாசிவம் உள்ளிட்ட அதிமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் என பலர் உடனிருந்தனர்.