வாணியம்பாடியில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு டிபிடி, டிடி தடுப்பூசி

5 வயது முதல் 16 வயது வரை பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு டிபிடி,டிடி தடுப்பூசி போடப்படுவதை வட்டார மருத்துவ அலுவலர் ஆய்வு செய்தார்

Update: 2021-12-03 14:33 GMT

வாணியம்பாடி நகராட்சி அரசு ஆரம்பப் பள்ளியில் மாணவர்களுக்கு டிபிடி, டிடி தடுப்பூசி போடப்பட்டது 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 5-6 மற்றும் 10-16 வயதுள்ள மாணவ, மாணவியருக்கும்  டிபிடி, டிடி தடுப்பூசி ஆண்டு தோறும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று வாணியம்பாடி நகராட்சி அரசு ஆரம்பப் பள்ளியில், தடுப்பூசி பணிகள்  மேற்கொள்ளப்பட்டு வருவதை வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி. அவர்கள் பார்வையிட்டார்.

உடன் பள்ளியின் தலைமையாசிரியர், செவிலியர் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News