வாணியம்பாடி அருகே ஆட்டோவில் மது பாட்டிலை கடத்திவர் கைது
வாணியம்பாடி அருகே அரசு டாஸ்மாக் கடையில் இருந்து கள்ளத்தனமாக விற்பனைக்கு எடுத்து வந்த 550 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ளத்தனமாக விற்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி ரகசியத் தகவல் கிடைத்தது.
மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், வாணியம்பாடி திம்மாம்பேட்டை சாலையில் தனிப்பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திம்மாம்பேட்டை அரசு டாஸ்மாக் கடையில் இருந்து வாணியம்பாடிக்கு ஆட்டோ மூலமாக 11 அட்டை பெட்டிகளில் 550 மது பாட்டில்களை விற்பனைக்காக எடுத்து வந்தபோது போலீசார் வாகன தணிக்கையில் சிக்கியது.
போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜ் மகேஷ் (வயது 30) தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து அவர் கொண்டுவந்த மது பாட்டில்கள் மற்றும் ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்து அம்பலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.