வாணியம்பாடி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 5 பேர் கைது; போலீசார் அதிரடி
வாணியம்பாடி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியதாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைனயடுத்து, வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் பழனி செல்வம் தலைமையில் போலீசார் ஒரு குழு கொரிபள்ளம் பகுதியிலும் மற்றோர் குழு மாதகடப்பா, தேவராஜபுறம் மலைப் பகுதிகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது கொரிப்பள்ளம் பகுதியில் உள்ள மறைவான இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்ச தயாராக பதுக்கி வைத்திருந்த சுமார் 4 ஆயிரம் லிட்டர் சாராய ஊரல்களை அழித்தனர். மேலும் தப்பியோடிய கள்ளச்சாராய கும்பலை தேடி வருகின்றனர்.
இதேபோல் மாத கடப்பா மலைப்பகுதியில் வீடுகளுக்கு பின்புறம் உள்ள மறைவான இடங்களில் கள்ளச்சாராயம் காய்சிக்கொண்டு இருந்ததை கண்டறிந்த போலீசார், அங்கு சென்று பேரல்களில் இருந்த சுமார் 500 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் அடுப்புகளை அழித்தனர்.
மேலும் கள்ளச்சாராயம் கடத்த பயன்படுத்தும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து கள்ளச்சாராய கும்பல சேர்ந்த விஜயன், சூரியா, வேலு, சிவாஜி, செல்லப்பா ஆகிய 5 பேரை கிராமிய போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.