வாணியம்பாடியில் உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட பணம் பறிமுதல்
வாணியம்பாடியில் வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.2.97 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்
நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்
இந்த நிலையில், வாணியம்பாடி அம்பூர் பேட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சித்ரா தலைமையிலான குழுவினர் வாகன சோதனையின்போது, சூளகிரியை சேர்ந்த லோகநாதன் என்பவர் உரிய ஆவணங்களின்றி 2 லட்சத்தி 97 ஆயிரத்து 500 ரூபாய் காரில் கொண்டு சென்றார் .
அவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள், பணத்தை வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி மேலாளர் ஜெய்பிரகாஷிடம் ஒப்படைத்தனர்