வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கிகள் பதுக்கி வைத்த 2 பேர் கைது

ஆலங்காயம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட வீட்டில் நாட்டு துப்பாக்கிகள் பதுக்கி வைத்த இருவரை கைது செய்து போலீசார் விசாரணை;

Update: 2021-12-06 14:30 GMT

ஆலங்காயம் அருகே நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தவர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே உள்ள  கல்லரபட்டி, பூங்குளம் ஆகிய இடங்களில் வன விலங்குகளை வேட்டையாட அனுமதிபெறாமல்  நாட்டுதுப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனுக்கு கிடைத்தது.

ரகசிய தகவலின் பேரில் கல்லரபட்டி, பூங்குளம் பகுதிகளில் ஆலங்காயம் போலீசார் சென்று அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் கல்லரபட்டியில் சின்னபையன் என்பர் வீட்டிலும் பூங்குளம் பகுதியில் சாமிநாதன் என்பவர் வீட்டிலும் நடத்திய சோதனையில் அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News